2027 ஹஜ் யாத்திரை: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு – சவூதியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
#Minister
#LANKA4
#Agreement
#SaudiArabia
#Pilgrims
Abi
36 minutes ago
2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு 3,500 யாத்திரிகர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ இருதரப்பு ஒப்பந்தம் கடந்த நவம்பர் 09ஆம் திகதி சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை சார்பில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரும், சவூதி அரேபியா சார்பில் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் பதா பின் சுலைமான் மாஷத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள், ஒழுங்குவிதிகள் மற்றும் யாத்திரிகர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் இரு தரப்பு அதிகாரிகளும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் மூலம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து 3,500 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.