2027 வரவு செலவுத் திட்டம் குறித்து சஜித் தலைமையில் எதிர்க்கட்சி ஆலோசனை!

#SriLanka #Parliament #Sajith Premadasa #LANKA4 #budget #discussion #Economic
Abi
18 minutes ago
2027 வரவு செலவுத் திட்டம் குறித்து சஜித் தலைமையில் எதிர்க்கட்சி ஆலோசனை!

2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சியினர் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள், முந்தைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்கம், வரிவிதிப்பு, வறுமை நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

அரசாங்கம் தனது பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக உண்மையான பொருளாதாரத் தரவுகளை மறைத்து, தவறான புள்ளிவிவரங்களை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் தேவைக்கு அதிகமான வரிச்சுமையை மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளதாகவும், மக்களுக்குப் போதிய நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் 220 இலட்சம் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் மற்றும் அவற்றின் செயற்படுத்தல் நிலைமைகளைக் கண்காணிக்கும் நோக்கில் oversight.lk என்ற புதிய இணையத்தளத்தை எதிர்க்கட்சி கடந்த நவம்பர் 11ஆம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையத்தளத்தின் ஊடாக முந்தைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்கம், அமைச்சுக்களின் செயற்பாடுகள், அரச வருமானம் மற்றும் செலவினங்கள், அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தனது அரசாங்கத்தின் மூன்றாவது தேசிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!