அனோஜன் சிவராசா வழக்கிலிருந்து விடுதலை – விரைவில் நாடு திரும்புகிறார்!

#SriLanka #Investigation #LANKA4 #SaudiArabia #Legal #SivarasaAnojan
Abi
21 minutes ago
அனோஜன் சிவராசா வழக்கிலிருந்து விடுதலை – விரைவில் நாடு திரும்புகிறார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என சவூதி அரேபிய அரச தரப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நவம்பர் 11ஆம் திகதி அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்காக அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் முடிவில், வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டு, வழக்கு முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனோஜனுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவை இனி நடைமுறையில் இருக்காது என இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்து வழக்கின் முடிவு மற்றும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அனோஜனை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர் வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனோஜன் சிவராசா விரைவில் நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!