2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று நிகழ்த்துகிறார் ஜனாதிபதி!

#SriLanka #Parliament #Minister #LANKA4 #President #Finance #budget #AnuraKumaraDissanayake
Abi
40 minutes ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று நிகழ்த்துகிறார் ஜனாதிபதி!

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) பாராளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இதேவேளை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து சனிக்கிழமைகளிலும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், இக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!