சிறுவன் ஹம்தியின் மரண அறிக்கையை வெளியிடக் கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம்!
#SriLanka
#Colombo
#Death
#Health
#Protest
#Treatment
#LANKA4
#inquiry
Abi
21 hours ago
கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் ஹம்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி, இன்று (11) புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள மரண விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, குறித்த சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையில், வெளிநாட்டில் வசிக்கும் இரு மருத்துவர்களையும் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.