தேசிய சம்பியன் பட்டம் வென்ற யூனியன் கல்லூரி மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு!

#SriLanka #Jaffna #LANKA4 #football #ChampionsTrophy
Mithra
21 hours ago
தேசிய சம்பியன் பட்டம் வென்ற யூனியன் கல்லூரி மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு!

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணி தேசிய சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கல்லூரிக்கும் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்த வெற்றி வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையில் இன்று (11) சிறப்பான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, மருதனார்மடம் சந்தியிலிருந்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான வெற்றி ஊர்வலம், கே.கே.எஸ். வீதி ஊடாகச் சென்று யூனியன் கல்லூரியைச் சென்றடைந்தது.

கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தேசிய சம்பியன் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பளித்துக் கௌரவித்தனர்.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்து கல்லூரியின் பெயரையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் உயர்த்திய மாணவிகளுக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!