இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்தது!

#SriLanka #Tourist #Country #LANKA4 #Visit #Devolopment #Number
Abi
2 days ago
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்தது!

இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 19 இலட்சத்து 12 ஆயிரத்து 233 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகாரசபையின் புதிய புள்ளிவிபரங்களின்படி, நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மாத்திரம் 49,929 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 512,026 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 176,670 பேரும், சீனாவிலிருந்து 126,326 பேரும், ஜேர்மனியிலிருந்து 108,754 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் இந்தியாவிலிருந்து அதிகளவாக 12,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!