டிசம்பரில் முட்டை விலை ரூ. 47 ஆக உயரக்கூடும்!
#SriLanka
#prices
#Egg
#LANKA4
#meat
#Production
#Association
Abi
5 hours ago
இலங்கையில் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ரூ. 45 முதல் ரூ. 47 வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்துள்ளார்.
மூலப்பொருட்களின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் முட்டை உற்பத்திச் செலவும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் மாதத்தில் சுற்றுலா விடுதிகளின் தேவை அதிகரிக்கும்போது சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, புரத உணவுகளான முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்றவற்றுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்குமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.