பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம்: உயர் நீதிமன்ற விளக்கம் சபாநாயகரிடம்!

#SriLanka #LANKA4 #Judge #Court #Association
Abi
6 hours ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம்: உயர் நீதிமன்ற விளக்கம் சபாநாயகரிடம்!

'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்' (PSTA) சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வியாக்கியானம் தற்போது சபாநாயகரிடம் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!