பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

#SriLanka #Batticaloa #Investigation #LANKA4 #pillaiyan #Court #Remand
Abi
6 hours ago
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கல்லடி முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானப் பகுதியில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் இவ்வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய இரு சந்தேகநபர்களும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாக 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!