இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா? டிரம்ப் கிளப்பிய சந்தேகம்
#Election
#world_news
#ImportantNews
#DonaldTrump
Mithra
7 hours ago
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள நிலையில், தேர்தலின் நேர்மை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.