வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கோரி வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் இன்று நாடளாவிய போராட்டம்!

#SriLanka #Health #Protest #doctor #LANKA4
Abi
9 hours ago
வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு கோரி வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் இன்று நாடளாவிய போராட்டம்!

சம்பளக் குறைப்பு, கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று (10) போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் நடைபெறவுள்ளது.

அனைத்து மாவட்ட கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

எனினும், இப்போராட்டத்தினால் வைத்தியசாலைகளின் வழமையான சேவைகளுக்கோ, நோயாளர் பராமரிப்புப் பணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், பணிப்புறக்கணிப்பு இன்றி அனைத்து வைத்தியசாலைகளிலும் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்துக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இணைந்த சுகாதார ஊழியர் சங்கமும் அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!