நளின் பண்டாரவின் பயணப் பொதியிலிருந்து 39 ட்ரோன்கள், 16 ஒலிவாங்கிகள் பறிமுதல்!

#SriLanka #Parliament #Airport #LANKA4 #Drone #Katunayaka
Abi
29 minutes ago
நளின் பண்டாரவின் பயணப் பொதியிலிருந்து 39 ட்ரோன்கள், 16 ஒலிவாங்கிகள் பறிமுதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த ட்ரோன்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் (ICL), தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (MoD) அனுமதி ஆகியன அவசியமாகும்.

எனினும், குறித்த அனுமதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!