தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025 26 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!

#Colombo #School #International #LANKA4 #President #Award #AnuraKumaraDissanayake #national
Abi
31 minutes ago
தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025 26 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (08) பிற்பகல் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 2025  26 இற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரச துறை, பாடசாலைகள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உற்பத்தித்திறன், புத்தாக்கம், செயற்திறன் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த இப்போட்டி, 'Clean Sri Lanka' திட்டத்துடன் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணியாளர்களுக்கு நிகழ்வில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், விருது பெற்ற நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!