கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் மரணம்: நால்வர் படுகாயம்

#Colombo #Death #Accident #Hospital #kandy #Road #LANKA4 #L4
Prasu
25 minutes ago
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் மரணம்: நால்வர் படுகாயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த வேனின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!