கொழும்பில் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – இன்று விசேட கலந்துரையாடல்!
#SriLanka
#Colombo
#LANKA4
#Flood
#municipal council
Abi
14 minutes ago
கொழும்பு நகரில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) நடைபெறவுள்ளது.
கொழும்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில், நகரின் மழைநீர் வடிந்தோடுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
மேலும், மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், வெள்ளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.