சற்றுமுன் பெய்த திடீர் மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொழும்பு
#Colombo
#LANKA4
#Train
#Flood
#service
#Climate
#HeavyRain
#L4
Prasu
1 hour ago
கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வை ரயில் நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
