வெள்ளை மாளிகை அருகே விரலால் துப்பாக்கி சைகை செய்த நபர் கைது

#ARREST #LANKA4 #Security #WhiteHouse #gun #L4
Prasu
2 hours ago
வெள்ளை மாளிகை அருகே விரலால் துப்பாக்கி சைகை செய்த நபர் கைது

வெள்ளை மாளிகை அருகே நேஷனல் கார்டு (National Guard) படை வீரர் ஒருவரை நோக்கி, விரல்களைத் துப்பாக்கி போலக் காட்டி சைகை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வில்லியம் ஜோனதன் கிளார்க் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையால் சாலையில் வேன் ஓட்டிக்கொண்டிருந்த நேஷனல் கார்டு வீரரைச் சுடுவது போலச் சைகை செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர் என்று அவரது கைது தொடர்பான பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28 வயதான அவர் மீது "அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தது" மற்றும் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கிளார்க் மீது சுமத்தப்பட்டுள்ள "அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தது" என்ற குற்றச்சாட்டுக்கு, அதிகபட்சமாக 180 நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!