திறைசேரியில் நிதி இருக்கும்போது எரிபொருளுக்கு ஏன் மேலதிக வரி? – அரசாங்கத்திடம் சரமாரிக் கேள்வி
#SriLanka
#government
#taxes
#LANKA4
#Public
#Relief
Abi
56 minutes ago
திறைசேரியில் 690.3 பில்லியன் ரூபா நிதி கையிருப்பில் இருக்கும்போது, எரிபொருள் நிவாரணத்திற்காக மக்களிடமிருந்து மேலதிக வரி அறவிட வேண்டிய அவசியம் என்ன என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எரிபொருள் மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட 57 பில்லியன் ரூபாவில், 41 பில்லியன் ரூபா இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிதியின் முழுமையான பயன் மக்களைச் சென்றடைந்ததா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுப்போக்குவரத்துத் துறையினருக்கு இலக்கு அடிப்படையில் எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மானிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பில் உரிய புள்ளிவிபரங்களுடன் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.