'கைவாறு முத்து' இலங்கைக்கு நாடு கடத்தல் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

#SriLanka #ARREST #Airport #Investigation #International #LANKA4 #Katunayaka #Criminal
Abi
1 hour ago
'கைவாறு முத்து' இலங்கைக்கு நாடு கடத்தல் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் யமன் சப்புகே மனோஜ் முத்துகுமாரன பிரியதர்ஷன எனும் 'கைவாறு முத்து', ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இவர், கடுவெல கொரதொட்ட வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்ற இவர், அந்நாட்டுப் பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

சிறைத்தண்டனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 1.50 மணியளவில் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புடன் நுகேகொடையிலுள்ள மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!