மேற்கு ஆசிய மோதலால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு ரூ.35.6 பில்லியன் நட்டம்!

#SriLanka #Fuel #Asia #LANKA4 #West #Airlines
Mahathi
2 hours ago
மேற்கு ஆசிய மோதலால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு ரூ.35.6 பில்லியன் நட்டம்!

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மற்றும் வானூர்தி எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில், வரிக்கு முந்தைய நிலையில் 35.6 பில்லியன் ரூபாய் நட்டத்தை நிறுவனம் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சின் அரையாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 82.8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. 

கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் இது 62.6 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது.

எனினும், அதிகரித்த எரிபொருள் மற்றும் விமானப் பராமரிப்புச் செலவுகள், அந்நியச் செலாவணி இழப்புகள் மற்றும் நிதிச் செலவுகள் காரணமாக நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

மேலும், மேற்கு ஆசிய மோதலால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டதுடன், சில நாடுகளுக்கான விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் மூலம் கிடைத்த 3.4 பில்லியன் ரூபாய் நிகர வருமானத்தையடுத்து, குழுமத்தின் மொத்த நிகர நட்டம் 32.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, வானூர்தி எரிபொருளின் விலை அதிகரிப்புடன் அதன் கிடைப்பனவும் குறைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் நோக்கில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!