யாழில் திடீர் பணக்காரர்கள்! 18 பேரின் சொத்துக்கள் குறித்து விசாரணை – பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

#SriLanka #Jaffna #Police #Investigation #people #LANKA4 #Court
Mahathi
1 hour ago
யாழில் திடீர் பணக்காரர்கள்! 18 பேரின் சொத்துக்கள் குறித்து விசாரணை – பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான சொத்துக்களையும் செல்வத்தையும் சேர்த்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 18 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்தனர், அவற்றுக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது மற்றும் அவர்களின் வருமான மூலங்கள் என்ன என்பன தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலர் தமது சொத்து விபரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், குறித்த 18 பேர் யார், அவர்களின் சொத்துக்களின் பின்னணி என்ன என்பது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஆர்வமும் பேசுபொருளும் அதிகரித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!