பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர்

#CourtOrder #Actor #Prison #Sexual Abuse #LANKA4 #ENGLAND #comedy #L4
Prasu
1 hour ago
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர்

20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையான குற்றச்சாட்டுகளின் பேரில், கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்காக ரஸ்ஸல் பிராண்ட் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

தண்டனை விதிக்கப்படும்போது ரஸ்ஸல் பிராண்ட் ஒரு "கணிசமான" சிறைத் தண்டனையை எதிர்கொள்வார் என்று நீதிபதி ஜோயல் பென்னாதன் குறிப்பிட்டுள்ளார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் நடிகரும் நகைச்சுவையாளருமான அவர், இரக்கமற்ற, கணக்கிடும், சூழ்ச்சி செய்யும் ஒரு "பாலியல் வேட்டையாடுபவர்" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

51 வயதான ரஸ்ஸல் பிராண்ட், குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தான் இளமைப் பருவத்தில் பாலியல் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் ஒரு காலத்தில் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்ததாகவும் ஆனால் யாருடைய விருப்பத்திற்கும் எதிராக எதையும் செய்ய ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை என்றும் சாட்சியமளித்தார். 

இந்நிலையில், ரஸ்ஸல் நான்கு பெண்களை உள்ளடக்கிய ஒரு கற்பழிப்பு மற்றும் மூன்று பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். 

இரண்டு கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அநாகரிகத் தாக்குதல் முயற்சி குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!