ஈரானில் கட்டாயம் ஆட்சி மாற்றம் அவசியம் – முன்னாள் மன்னர் குடும்ப உறுப்பினர்
#government
#War
#LANKA4
#Iran
#Violence
#Middle East
#L4
Prasu
2 hours ago
ஈரானின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த முடியாது என ஈரானின் முன்னாள் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ரெசா பஹ்லவி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்போதைய ஆட்சியை உலகளாவிய பயங்கரவாதத்தின் தலைமையகமாக மாற்றப்பட்ட ஆட்சி என விமர்சித்துள்ள அவர், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆட்சி நீடிக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியாது என்றும், ஈரானிய மக்களின் நலனுக்காகவும் ஐரோப்பியர்களின் பாதுகாப்புக்காகவும் ஆட்சி மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் முன்னாள் மன்னர் முகமது ரெசா பஹ்லவியின் மகனான ரெசா பஹ்லவி, தற்போது ஈரானிய எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டு வருகின்றார்.