புதுப்பிக்கத்தக்க மின்சார இலக்குகளை அடைவதில் சிக்கல்: சிறு உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு!

#SriLanka #Parliament #Meeting #LANKA4
Abi
3 hours ago
புதுப்பிக்கத்தக்க மின்சார இலக்குகளை அடைவதில் சிக்கல்: சிறு உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு!

2027–2029ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி இலக்குகளை அடைவதில் அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் தடையாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தியாளர்களுக்கான சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும், அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம் நிலவுவதும் முதலீடுகளைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், வீட்டு மட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறு உற்பத்தியாளர்களுக்கான அனுமதிகளை விரைவுபடுத்தி, சலுகைகளை மீள வழங்குவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!