பாடசாலையில் 6 வயது சிறுமியை தாக்கிய ஹரியானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் விடுவிப்பு
ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில், மழலையர் பள்ளி மாணவி ஒருவரை கற்கள் மற்றும் பூந்தொட்டியைக் கொண்டு தாக்கிய, மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுவன், சிறார் காப்பகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, அந்தச் சிறுவனுக்கு முன்னதாக எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்றும் அவனைத் தொடர்ந்து காப்பகத்தில் வைத்திருப்பது அவனது கல்வி மற்றும் உளவியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவனது தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்தச் சிறுவனுக்கு முறையான ஆலோசனை (counselling), நடத்தை சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்வதாக அவனது பெற்றோர்கள் வாரியத்திடம் உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்ச்குலா சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board), அந்தச் சிறுவனை விடுவித்த அதே வேளையில், அவனது அடையாளத்தை வெளிப்படுத்தும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொதுத் தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.