வரி செலுத்துவோர் அடையாள இலக்க சான்றிதழ் கட்டாய நடைமுறை ஒத்திவைப்பு!
குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த நிலையில், TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான பொதுமக்களின் கோரிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சான்றிதழ்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வசதிகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி e-Services தளத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய அறிவிப்பு: இந்த நடைமுறை இரத்துச் செய்யப்படவில்லை. 2027 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.