ஈரான் போர் எதிரொலி: தேர்தல் தோல்விக்கு அதுவே காரணம் – அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் தோல்வியடைந்தமைக்கு ஈரான் மீதான போர் முக்கிய காரணம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “நாம் தோல்வியடைந்ததற்கான காரணம் போர். ஜனாதிபதியே நேற்றிரவு இதனைத் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருதல், வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து நேர்மையான கலந்துரையாடல் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரான் போர் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக ஒப்புக்கொண்ட போதிலும், இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பித்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் குடியரசுக் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து வெளிப்படத் தொடங்கியுள்ளன.