16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 54 வருட கடூழிய சிறை தண்டனை!
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவருக்கு 54 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அக்டோபர் 29, 2026 அன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான பிரதிவாதி, அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 18 ஆண்டுகள் வீதம், மொத்தம் 54 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் 150,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை என, மொத்தம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 200,000 ரூபாயை வழங்குமாறும் பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.