பரிசு வழங்குவதாக கூறி வாட்ஸ்அப் குழு மூலம் மோசடி - சந்தேகநபர் ஒருவர் கைது!

#SriLanka #ARREST #LANKA4 #Whatsapp #Fraud
Thamilini
2 hours ago
பரிசு  வழங்குவதாக  கூறி  வாட்ஸ்அப் குழு மூலம்  மோசடி -  சந்தேகநபர் ஒருவர் கைது!

வாட்ஸ்அப் குழு மூலம்  பரிசு  வழங்குவதாக கூறி 1,455,000 மோசடி செய்த  குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவிடம் முறைபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டில் சந்தேக நபர் உரிய தொகையைத் தனது கணக்கில் வரவு வைத்துப் பணத்தை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்றைய தினம்  கட்டுநாயக்க விமான நிலையப் பயணிகள் முனையத்தில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நுவகொடவைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். 

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!