இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
#SriLanka
#LANKA4
#Human Rights
#AnuraKumaraDissanayake
#Appoint
Thamilini
4 hours ago
ஓய்வுபெற்ற நீதிபதி வி. கே. மலகொட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எஸ். ஒய். எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஜீஸ், டாக்டர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன மற்றும் பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய நியமனக் கடிதங்கள் இன்று பிற்பகல் (30) ஜனாதிபதி செயலகத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததன் காரணமாக ஏற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.