2027ஆம் ஆண்டு 2ஆம், 6ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!

#PrimeMinister #LANKA4 #education #Harini Amarasooriya
Abi
1 hour ago
2027ஆம் ஆண்டு 2ஆம், 6ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!

கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பாடசாலைகளுக்கு இடையிலான வசதி வேறுபாடுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் 2ஆம் தரத்திற்கும் 6ஆம் தரத்திற்கும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 29ஆம் திகதி குருநாகல், கெக்குணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பிள்ளையின் எதிர்காலம் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை அல்லது வாழும் பிரதேசத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டதுடன், அனைத்து மாணவர்களுக்கும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாட அறிவு, கற்பித்தல் முறைகள், ஆசிரியர் பயிற்சி, பௌதிக வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட கல்வியின் ஐந்து முக்கிய அம்சங்களையும் மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!