ஆறுகளின் நீர்மட்டம் குறைவு – வெள்ள நிலைமை படிப்படியாகத் தணிவு!

#SriLanka #water #LANKA4 #Flood #River
Abi
1 hour ago
ஆறுகளின் நீர்மட்டம் குறைவு – வெள்ள நிலைமை படிப்படியாகத்  தணிவு!

நாட்டில் நிலவும் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, வெள்ள அபாய மட்டத்தில் காணப்பட்ட ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களு கங்கையின் மில்லக்கந்த பகுதி, கிங் கங்கையின் பத்தேகம பகுதி மற்றும் நில்வளா கங்கையின் தல்கஹகொட பகுதி ஆகிய இடங்களில் ஏற்பட்டிருந்த சிறு வெள்ள நிலைமை தற்போது தணிந்து வருவதாகத் திணைக்களத்தின் தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கலா ஓயா, மீ ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!