வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
கனடாவும் ஐக்கிய அரபு அமீரகமும், இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையேயான தடைகளைக் குறைக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இரு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்த முயன்று வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA) கார்னியும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், சுங்க வரிகளைக் குறைக்கவும், தேவையற்ற நிர்வாகத் தடைகளை நீக்கவும், இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சுங்க வரிகள் கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் ஒட்டாவாவின் அமெரிக்கா அல்லாத வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதாக கார்னி உறுதியளித்துள்ளார்.