நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு: சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை!

#SriLanka #Police #Parliament #Namal Rajapaksha #LANKA4 #Case #Court
Abi
1 hour ago
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு: சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணைகள் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதற்காக வழக்கை 2027 பெப்ரவரி 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'என்.ஆர். கன்சல்டன்சி' நிறுவனத்தில் சுமார் 15 மில்லியன் ரூபாவை நாமல் ராஜபக்ச முதலீடு செய்ததாகக் கூறப்படும் பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணப்பரிமாற்றம் தொடர்பாக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!