வடக்கு மாகாண பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகள் பங்களிக்க வேண்டும் – ஆளுநர்

#SriLanka #NorthernProvince #Vavuniya #Event #LANKA4 #Devolopment #Economic
Abi
3 hours ago
வடக்கு மாகாண பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகள் பங்களிக்க வேண்டும் – ஆளுநர்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் விவசாயிகள் பங்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், 2,500 விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 121 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக 250 விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

விவசாய உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல், நவீன விவசாய முறைகளை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!