இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய சுவிஸ் நிறுவனம்

#SriLanka #Flight #SWITZERLAND #LANKA4 #service #L4
Prasu
2 hours ago
இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய சுவிஸ் நிறுவனம்

சுவிஸ் விமான நிறுவனமான 'எடெல்வைஸ் ஏர்', இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. 

இதன் மூலம் சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்குமிடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) தகவல்படி, இந்த விமான நிறுவனம் குளிர்கால பருவத்திற்கான தனது சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பயணிகளுக்கு நேரடி விமான இணைப்பை வழங்குகிறது.

இந்த விமானத்தில் வருகை தந்த பயணிகள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர்.

பயணிகள் வருகையின் போது அவர்களுக்கு ஒரு சிறப்பான இலங்கை வரவேற்பை வழங்கும் நோக்கில் இந்த கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

'எடெல்வைஸ் ஏர்' நிறுவனத்தின் குளிர்கால சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது, இலங்கையின் சுற்றுலாப் பருவத்தின் உச்சக்காலத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!