கடவுச்சீட்டுகளைப் பெற பிராந்திய அலுவலகங்களுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு
#SriLanka
#Passport
#LANKA4
#Notice
#Office
Thamilini
2 hours ago
கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்லும் விண்ணப்பதாரர்கள், நாளை (29) முதல் இணையவழியில் சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
திணைக்களம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்தச்செயல்முறையை எளிதாக்கியுள்ளதாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.