சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் தொடர்கிறது!
#SriLanka
#ARREST
#LANKA4
#Public
#Court
#Remand
Abi
3 hours ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றமை, அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சுகீஸ்வர பண்டார தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை ஆராய்ந்த நீதவான், அவரை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.