2026 ஆண்டிற்கான பேலன் டி ஓர் (Ballon d'Or) விருதுகள் மற்றும் வெற்றியாளர்களின் முழு பட்டியல்
#Women
#LANKA4
#Men
#football
#Player
#Award
#World
#L4
Prasu
1 hour ago
லண்டனில் நடைபெற்ற 70வது ஆண்டு விழாவில், ஹாரி கேன் 2026ம் ஆண்டிற்கான பேலன் டி ஓர்' (Ballon d'Or) விருதை வென்றுள்ளார்.
கிளப் மற்றும் தேசிய அணிக்காக 73 கோல்களை அடித்த ஹாரி கேன், இறுதி வாக்கெடுப்பில் கைலியன் எம்பாப்பே மற்றும் லாமின் யமால் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்த விருதை வென்றுள்ளார்.
இதன் மூலம், 2001ம் ஆண்டிற்குப் பிறகு 'பேலன் டி ஓர்' விருதை வென்ற முதல் ஆங்கிலேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, பெண்களுக்கான 'பேலன் டி ஓர்' விருதை அலெக்ஸியா புட்டெல்லாஸ் வென்றுள்ளார்.
லண்டன் சிட்டி லயோனஸஸ் அணியைச் சேர்ந்த இவர், தனது விளையாட்டு வாழ்க்கையில் இந்த விருதை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
2026 பாலன் டி ஓர் (Ballon d'Or) விருதுகள் மற்றும் வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்:
- ஆண்களுக்கான பேலன் டி ஓர் - ஹாரி கேன் (பேயர்ன் மியூனிக் & இங்கிலாந்து)
- பெண்களுக்கான பேலன் டி ஓர் - அலெக்ஸியா புட்டெல்லாஸ் (லண்டன் சிட்டி லயனசஸ் & ஸ்பெயின்)
- ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாளர் - லூயிஸ் டி லா ஃபுவென்டே (ஸ்பெயின்)
- பெண்களுக்கான சிறந்த பயிற்சியாளர் - பெரே ரோமியூ (பார்சிலோனா)
- ஆண்களுக்கான சிறந்த இளம் வீரர் - லாமின் யமால் (பார்சிலோனா & ஸ்பெயின்)
- பெண்களுக்கான சிறந்த இளம் வீராங்கனை - விக்கி லோபஸ் (பார்சிலோனா & ஸ்பெயின்)
- ஆண்களுக்கான சிறந்த ஸ்ட்ரைக்கர் - ஹாரி கேன் (பேயர்ன் மியூனிக் & இங்கிலாந்து)
- பெண்களுக்கான சிறந்த ஸ்ட்ரைக்கர் - சார்லின் கோரல் (சிஎஃப் பச்சுகா & மெக்சிகோ)
- ஆண்களுக்கான சிறந்த கோல்கீப்பர் - உனாய் சைமன் (அத்லெடிக் கிளப் & ஸ்பெயின்)
- பெண்களுக்கான சிறந்த கோல்கீப்பர் - காடா கோல் (பார்சிலோனா & ஸ்பெயின்)
- ஆண்களுக்கான சிறந்த கிளப் - பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்
- பெண்களுக்கான சிறந்த கிளப் - பார்சிலோனா