ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கோரிக்கை!

#SriLanka #today #Namal Rajapaksha #LANKA4 #Bail #Heart #Open #Shiranthi Rajapaksa
Abi
2 hours ago
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) மாலை திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிஷ் வழக்கு தொடர்பாகக் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷ தற்போது இதயத் துடிப்பு உதவி இயந்திரத்தின் ஆதரவுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, குடும்பத்தின் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷவுக்கு கிரிஷ் வழக்கில் பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக வழக்கை நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!