பிரதமர் அலுவலக நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ள இஸ்ரேலின் முதல் பெண் சாறா நெதன்யாகு
#PrimeMinister
#Women
#government
#Israel
#LANKA4
#Fund
#L4
Prasu
2 hours ago
இஸ்ரேலில் 2019 முதல் 2026 வரை 470,000 அமெரிக்க டொலர்கள் பிரதமர் அலுவலக நிதியில் துஷ்பிரயோகப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 90 வீதமான நிதி , இஸ்ரேலின் முதல் பெண் சாறா நெதன்யாகுவின் ஒப்பனை (Make up), சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இஸ்ரேலின் தகவல் சுதந்திர இயக்கம் இந்தச் செலவுகள் தொடர்பான தகவல்களைக் கோரியது. வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி:
- 2025 பெப்ரவரி: வாஷிங்டன் பயணத்தின்போது ஒப்பனை மற்றும் சிகை அலங்காரச் சேவைகளுக்காக சுமார் 13,500 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
- 2024 ஜூலை: வாஷிங்டன் பயணத்தின்போது இதற்காக சுமார் 11,500 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
- 2023 செப்டம்பர் முதல் நவம்பர் வரை: பிரதமரின் சிகை அலங்காரத்துக்காக 7,897 ஷெக்கல்களும் ஒப்பனைச் சேவைகளுக்காக 4,800 ஷெக்கல்களும் செலுத்தப்பட்டுள்ளன.