பிரதமர் அலுவலக நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ள இஸ்ரேலின் முதல் பெண் சாறா நெதன்யாகு

#PrimeMinister #Women #government #Israel #LANKA4 #Fund #L4
Prasu
2 hours ago
பிரதமர் அலுவலக நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ள இஸ்ரேலின் முதல் பெண் சாறா நெதன்யாகு

இஸ்ரேலில் 2019 முதல் 2026 வரை 470,000 அமெரிக்க டொலர்கள் பிரதமர் அலுவலக நிதியில் துஷ்பிரயோகப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 90 வீதமான நிதி , இஸ்ரேலின் முதல் பெண் சாறா நெதன்யாகுவின் ஒப்பனை (Make up), சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இஸ்ரேலின் தகவல் சுதந்திர இயக்கம் இந்தச் செலவுகள் தொடர்பான தகவல்களைக் கோரியது. வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி:

  • 2025 பெப்ரவரி: வாஷிங்டன் பயணத்தின்போது ஒப்பனை மற்றும் சிகை அலங்காரச் சேவைகளுக்காக சுமார் 13,500 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
  • 2024 ஜூலை: வாஷிங்டன் பயணத்தின்போது இதற்காக சுமார் 11,500 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
  • 2023 செப்டம்பர் முதல் நவம்பர் வரை: பிரதமரின் சிகை அலங்காரத்துக்காக 7,897 ஷெக்கல்களும் ஒப்பனைச் சேவைகளுக்காக 4,800 ஷெக்கல்களும் செலுத்தப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!