2026 தேசிய உற்பத்தித்திறன் விருது விழாவில் 247 விருதுகள் வழங்கி வைப்பு!
தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா இன்று (27) கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில், உற்பத்தித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், ஏனைய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மொத்தம் 247 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.