மன்னாரில் நள்ளிரவில் இடி மின்னல் அனர்த்தம்! 5 வீடுகள் சேதம்; 14 பேர் பாதிப்பு

#SriLanka #Mannar #strike #LANKA4 #Disaster #family #lightning #Disaster Management Centre
Abi
7 hours ago
மன்னாரில் நள்ளிரவில் இடி மின்னல் அனர்த்தம்! 5 வீடுகள் சேதம்; 14 பேர் பாதிப்பு

மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் ஐந்து வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், அவற்றின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளன.

மேலும், வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்கள் செயலிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். சேதங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!