இந்தியக் கடற்படையின் 3 கப்பல்கள் கொழும்பு வருகை! ஒக்டோபர் 28 வரை துறைமுகத்தில் தரிப்பு
இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு கடற்படைக் கப்பல்களும், இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பல் ஒன்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.
இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் (Tir), சுஜாதா (Sujata) மற்றும் இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பலான சாரதி (Sarathi) ஆகியன எதிர்வரும் 2026 ஒக்டோபர் 26 முதல் 28ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கவுள்ளன.
இந்த விஜயம், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவின் (First Training Squadron – 1TS) நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றது.
இதற்கு முன்னதாக, இக்கப்பல்கள் சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகத்திற்கும் மாலைதீவின் மாலே துறைமுகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன.
கொழும்பு விஜயத்தைத் தொடர்ந்து, இக்கப்பல்கள் இந்தியாவின் கொச்சித் துறைமுகத்திற்குத் திரும்பவுள்ளன.
இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கொழும்பு விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவுகள் மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலான நல்லெண்ணப் பயணமாக அமைந்துள்ளது.