பிரேசில் ஜனாதிபதி தேர்தல் வெற்றி – ஜனாதிபதி அனுர வாழ்த்து!

#SriLanka #Election #LANKA4 #Brazil #President #AnuraKumaraDissanayake
Abi
8 hours ago
பிரேசில் ஜனாதிபதி தேர்தல் வெற்றி – ஜனாதிபதி அனுர வாழ்த்து!

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் லூலா டா சில்வா வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இந்த வெற்றி பிரேசில் மக்கள் பெற்றுக்கொண்ட சாதாரண வெற்றியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல், பிரிவினை மற்றும் அரசியல் பொய்களைத் தோற்கடித்த வெற்றியாக இது பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேசில் மக்களை அரசியல் பொய்களாலும், நாடு வங்குரோத்து நிலையை அடையும் என்ற அச்சுறுத்தல்களாலும் ஏமாற்ற முடியாது என்பதை லூலா டா சில்வாவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள லூலா டா சில்வா, தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது எக்ஸ் தளப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!