களுத்துறையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - பெருமளவான போதைப்பொருட்கள் பறிமுதல்!

#SriLanka #Police #Investigation #drugs #LANKA4 #GunShoot #kalutara
Thamilini
1 day ago
களுத்துறையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - பெருமளவான போதைப்பொருட்கள் பறிமுதல்!

களுத்துறை, நாகொட பகுதியில், பொலிஸாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், களுத்துறை, பொம்புவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு அதன் சாரதிக்கு உத்தரவிட்டனர். 

இருப்பினும், அந்தச் சாரதி உத்தரவைப் புறக்கணித்து வாகனத்தைச் செலுத்திச் சென்றார்.

இதனையடுத்து, சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாரதி, நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர், களுத்துறை, ராஜவத்த பகுதியைச் சேர்ந்த 'ராஜவத்த சஞ்சு' என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!