சுவிற்சர்லாந்தின் FRIBOURG எனும் இடத்தில் பயங்கர தீ விபத்து

#SWITZERLAND #Accident #LANKA4 #fire #Rescue #vehicle #L4
Prasu
20 hours ago
சுவிற்சர்லாந்தின் FRIBOURG எனும் இடத்தில் பயங்கர தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் Fribourg மாநிலத்தில் உள்ள நிலத்தடி வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரவு 11 மணிக்கு முன்னதாக Fribourg நகரின் Route de l’Aurore பகுதியில் அமைந்துள்ள நிலத்தடி வாகனத் தரிப்பிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள ஐந்து குடியிருப்புக் கட்டிடங்களில் வசித்த 100க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தத் தீ விபத்தில், 4 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன, மேலும் 38 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்தில் ஏழு பேருக்கு அவசர மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

இது தொடர்பில் Fribourg மாநில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தீ விபத்தால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளமை அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!