2027ஆம் ஆண்டு இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

#SriLanka #PrimeMinister #LANKA4 #students #education #Harini Amarasooriya
Mahathi
1 day ago
2027ஆம் ஆண்டு இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகம்!

2026ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை, 2027ஆம் ஆண்டு இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மாணவர்களுக்கு அறிவை வழங்குவதுடன், அவர்களின் திறன்களை மேம்படுத்தி, சிறந்த விழுமியங்களைக் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது பல ஆண்டுகளாக முறையாக இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், உரிய நடைமுறைகளுக்கு அமைவாக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. 

இதற்கான நேர்முகத் தேர்வுகள் மற்றும் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 24ஆம் திகதி பொலன்னறுவை, எத்துமல்பிட்டிய ஆரம்பப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!